பூஜையுடன் தொடங்கியது ரஜினி நடிக்கும் ‘தர்பார்’: புகைப்படங்கள்!
தர்பார் படத்தின் பூஜை மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் ரஜினி, முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள்...
சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். இது ரஜினி நடிக்கும் 167-வது படம்.
லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படம் அடுத்த வருட பொங்கல் தினத்தன்று படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.
தர்பார் படத்தின் பூஜை மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் ரஜினி, முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள்.