செய்திகள்

தமிழ்ப் பெண்ணாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!

முதன்முதலாக அறிமுகமான 'ஒம் சாந்தி ஒம்' படத்தில் சாந்திபிரியாவாகவும், 'சென்னை எக்ஸ்பிரஸ்'

DIN

முதன்முதலாக அறிமுகமான 'ஒம் சாந்தி ஒம்' படத்தில் சாந்திபிரியாவாகவும், 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் மீனம்மாவாகவும் தமிழ்ப் பெண்ணாக நடித்த தீபிகா படுகோன், மீண்டும் தமிழ்ப் பெண்ணாக ரித்திக் ரோஷனுடன் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்.

இது ஏற்கெனவே அமிதாப்பச்சனுடன் ஹேமமாலினி தமிழ்ப் பெண்ணாக நடித்து, 13 ஆண்டுகளுக்கு முன் வெளியான 'சாத்தே பிசாத்' என்ற படத்தின் ரீமேக் ஆகும். முந்தைய படத்தில் தமிழ்ப் பெண்ணாக நடித்த ஹேமமாலினி பாத்திரத்திற்கு தற்போது தீபிகா பொருத்தமானவர் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்திருப்பதாக இயக்குநர் பாராகான் கூறியுள்ளார்.

உத்தர பிரதேசம் ஜோஹரி என்ற கிராமத்தில் வசிக்கும் சந்த்ரோ மற்றும் பிரகாஷி ஆகிய இருவயதான பெண்கள், தங்களது 50-ஆவது வயதிலிருந்து குறி பார்த்து சுடுவதில் வல்லவர்களாக விளங்கி வருவதால், "உலகிலேயே குறிபார்த்து சுடுவதில் வயதான பெண்கள்' என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்கள். இவர்களைப் பற்றி எடுக்கப்படும் 'சாந்த் கி ஆங்க்' என்ற படத்தில் வயதான பெண்களாக தாப்ஸி பன்னுவும், பூமி பெட்னேகரும் நடிக்கின்றனர். "வயதான பெண்ணாக மேக்-அப் போட்டு நடிப்பது சிரமமாக இருந்தாலும், இது ஒரு சவாலான பாத்திரம் என்பதால் தயங்காமல் ஒப்புக்கொண்டேன்'' என்கிறார் பூமி பெட்னேகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

SCROLL FOR NEXT