செய்திகள்

தாத்தா ஜெமினியுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு!

ஞான. ராஜசேகரன் இயக்கிய கணிதமேதை ராமானுஜம் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தவர் அபிநய்.

DIN


ஞான. ராஜசேகரன் இயக்கிய கணிதமேதை ராமானுஜம் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தவர் அபிநய். நடிகர் ஜெமினி - சாவித்ரியின் மகள் விஜயசாமுண்டீஸ்வரியின் மகன்தான் இவர். இப்போது அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து வருகிறார். அபிநய் பேசும் போது... சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்ரன், த்ரிஷா இணைந்து நடிக்கும் முதலை சம்பந்தப்பட்ட படத்தில் நடிக்கிறேன். பிச்சாவரத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இதில் சிம்ரனின் கணவராக நடிக்கிறேன். தப்பித்து போன முதலையை பிடிக்கும் கதை. இதில் நீச்சல் வீரராக நடிக்கிறேன். இதையடுத்து அத்தியப்பன் சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இது காமெடி படம். இந்த இரு படங்களுக்கும் பெயர் வைக்கவில்லை. இது தவிர இன்னொரு சைக்கலாஜி கதை ஒன்றிலும் நடிக்கிறேன். கதாநாயகன், வில்லன் என நடிப்பில் பிரித்து பார்ப்பதில்லை. விஜய் சேதுபதி எல்லா இடங்களிலும் இருக்கிறார். அவர் போல் நடிக்க வேண்டும் என்று ஆசை.

‘ராமானுஜம்' படத்தில் நடித்ததில் பெருமை. என் தாத்தா ஜெமினியுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. அவருடன் இருந்த காலங்கள் ரம்மியமானது. அவர் நடித்த ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்'  நான் இப்போது பார்க்கும் படம்' என்றார் அபிநய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT