மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வந்த கனமழையால் 69 தாலுகாக்களும், 761 கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அப்பகுதிகளிலிருந்து 4.24 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். முக்கியமாக, கோலாப்பூர் மற்றும் சாங்லி மாவட்டங்களிலிருந்து மட்டும் 3.78 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர், கடற்படை வீரர்கள் உள்ளிட்டோர் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திர மாநிலத்திலிருந்து கூடுதல் கடற்படை வீரர்களும் மீட்புப் பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2005-ஆம் ஆண்டு பெய்த மழையை விட இரண்டு மடங்கு மழை தற்போது பெய்துள்ளது. முதல்கட்ட ஆய்வின்படி, வெள்ளம் காரணமாக 27,468 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்களும், 484 கி.மீ. தொலைவிலான சாலைகளும் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் நடிகை ஜெனிலியா - ரிதேஷ் தம்பதி, மகாராஷ்டிர வெள்ள நிவாரணத்துக்கு ரூ. 25 லட்சத்தை அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸிடம் அளித்துள்ளார்கள். இதற்கு ஃபட்னவீஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.