செய்திகள்

எனது 75% கல்லீரல் கெட்டு விட்டது: அதிர வைத்த பாலிவுட் நடிகர் 

எனது 75% கல்லீரல் கெட்டு விட்டது என்று பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் தெரிவித்துள்ள தகவல்  அவரது ரசிகர்களை அதிர வைத்துள்ளது. 

IANS

மும்பை: எனது 75% கல்லீரல் கெட்டு விட்டது என்று பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் தெரிவித்துள்ள தகவல்  அவரது ரசிகர்களை அதிர வைத்துள்ளது. 

இந்தியாவின் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் அமிதாப் பச்சன். பாலிவுட் திரையுலகில் மட்டும் அல்லாது உலகம் முழுவதும் இந்திய சினிமாவின் பெருமைமிகு அடையாளமாக அறியப்படுபவர்.

சமீபத்தில் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் தனது உடல்நிலை குறித்து வெளியிட்ட தகவல்கள் அவரது ரசிகர்களை அதிர வைத்துள்ளது. அவர் கூறியதாவது:

எனது உடல்நிலை குறித்த தனிப்பட்ட   தகவல்களை எப்போதும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமாக அதுகுறித்த விழுப்புணர்வை ஏற்படுத்தி, நீங்களும் உங்கள் உடல் குறித்து சோதனை செய்து அறிந்து கொள்ள வேண்டும் என்று  விரும்புகிறேன்.

நான் காசநோயில் இருந்து, ஹெப்பாடிட்டீஸ் காய்ச்சலில் இருந்து மீண்டு வந்துள்ளேன் என்பதையும் சொல்லுவதில் எனக்கு தயக்கம் இல்லை. கெட்ட ரத்தம் ஏற்றப்பட்டதன் காரணமாக எனது கல்லீரல் பாதிக்கப்பட்டது. ஆனால் 20 வருடங்கள் கழித்தே அதை நான் அறிய முடிந்தது  என்பதால், எனது எனது 75% கல்லீரல் இப்போது கெட்டு விட்டது. தற்போது 25 % கல்லீரல் செயல்பாட்டுடன்தான் வாழ்ந்து வருகிறேன்.

இவை அனைத்திற்கும் தீர்வு உள்ளது. காசநோய்க்கு கூட சிகிச்சை உள்ளது. எனக்கு காச நோய் இருக்கிறது என்பது எனக்கு 8 வருடங்களாகத் தெரியாமல் இருந்தது. எனவே நீங்களும் உங்களது உடலை சோதனை செய்து நோய் குறித்து அறிய விரும்பாதவரை, உங்களால் அந்த நோய்க்கு தீர்வு காண முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னலொளி பெண்ணழகே... கிகி விஜய்!

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

என்றும் இயல்பாக... பார்வதி!

3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

SCROLL FOR NEXT