செய்திகள்

ஐந்தே நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டிய அக்‌ஷய் குமாரின் ‘மிஷன் மங்கள்’ படம்!

எழில்

பூமி கிரகத்தில் இருந்து மற்றொரு கிரகத்துக்கு (செவ்வாய்) இந்தியா அனுப்பிய முதல் விண்கலம் மங்கள்யான். கிரகங்களுக்கு இடையே செலுத்தப்படும் விண்கலத்தை வடிவமைத்து, திட்டம், கண்காணித்து, நிர்வகித்து, இயக்கவல்ல தொழில்நுட்பத் திறன் இந்தியா வாய்க்கப் பெற்றுள்ளதை உலகிற்கு பறைசாற்றவே மங்கள்யான் விண்கலத்தை இஸ்ரோ செவ்வாய்கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

உலக நாடுகளின் கிரகக் குடியேற்றத்தின் இலக்காகத் திகழ்ந்துவரும் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலனை அனுப்புவதற்காக "மங்கள்யான்' என்ற கனவுத் திட்டத்தை இஸ்ரோ வடிவமைத்தது. உலக அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மங்கள்யான் விண்கலம், 2013-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி விண்ணுக்கு செலுத்தப்பட்டது. மங்கள்யான் விண்கலத்தின் வெற்றியின் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வு விண்கலம் அனுப்பிய ஐரோப்பிய, அமெரிக்க, ரஷிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்து, உலகளவில் புதிய வரலாறு படைத்தது. மேலும், உலக அளவில் முதல் முயற்சியில் செவ்வாய் கிரகத்தை அடைந்த ஒரே நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது. ஆசிய அளவில் இந்த முயற்சியில் வென்ற முதல் நாடும் இந்தியாதான். 13.4 கிலோ எடை கொண்ட மங்கள்யான் ஆய்வு விண்கலம், விண்ணில் செலுத்தப்பட்டு 298 நாள்கள் கடந்த பிறகு, 2014-ஆம் ஆண்டு செப்.24-ஆம் தேதி செவ்வாய்கிரக வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, உலக வரலாற்றில் இந்தியா மீண்டும் சாதனை படைத்தது. 6 மாதங்களுக்கு ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், 4 ஆண்டுகள் கடந்தும் ஆய்வுப் பணியைத் தொய்வின்றி தொடர்ந்துள்ளது இஸ்ரோவின் பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. மங்கள்யான், ஒரு விண்கலம் மட்டுமல்ல, அது இந்தியர்களின் அறிவியல் ஆளுமையின் உச்சம் என்பதை உலகிற்கு பறைசாற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து, 2020-ஆம் ஆண்டு மங்கள்யான்-2 விண்கலத்தை செவ்வாய்கிரகத்துக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.


இந்தக் கனவுத் திட்டத்தை முன்வைத்து மிஷன் மங்கள் என்றொரு ஹிந்திப் படம் உருவாகி, சமீபத்தில் வெளியானது. அக்‌ஷய் குமார், வித்யா பாலன், தாப்சி, நித்யா மேனன் போன்றோர் நடித்துள்ளார்கள். பால்கியிடம் பணியாற்றிய ஜெகன் சக்தி இப்படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு - ரவி வர்மன். 

ஆகஸ்ட் 15 அன்று வெளியான இப்படம் ஐந்தே நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டியுள்ளது. இந்தியாவில் அக்‌ஷய் குமார் நடித்து விரைவாக ரூ. 100 கோடியை எட்டிய படம் என்கிற பெருமையை எட்டியுள்ளது. அக்‌ஷய் நடித்த 2.0, கேசரி ஆகிய படங்களை விடவும் இதன் வசூல் மெச்சும் வகையில் உள்ளது. மிஷன் மங்கள் போல 2.0 படமும் இந்தியாவில் 5-ம் நாளில் ரூ. 100 கோடி வசூலை அடைந்தது. கேசரி படம் இந்த இலக்கை 7-வது நாளில் எட்டியது. 5 நாள்களில் மிஷன் மங்கள் படம் இந்தியாவில் ரூ. 106 கோடி வசூலை அடைந்து சாதனை படைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT