செய்திகள்

அமீர் கான் படத்தில் எந்த வேடத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி?

சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இப்படத்தை இயக்கவுள்ளார்.

எழில்

தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்துக்குப் பிறகு அமீர் கான் நடிக்கும் படம் - லால் சிங் சத்தா. ஆறு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற புகழ்பெற்ற ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்பின் ரீமேக் அது. 

இந்தப் படத்தில் அமீர் கானின் ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். இருவரும் இதற்கு முன்பு த்ரீ இடியட்ஸ், தலாஸ் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இப்படத்தை இயக்கவுள்ளார். லால் சிங் சத்தா, 2020 கிறிஸ்துமஸ் சமயத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லால் சிங் சத்தா படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளது. ஃபாரஸ்ட் கம்ப் படத்தில் இடம்பெற்றபெஞ்சமின் புஃபோர்ட் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். அந்தக் கதாபாத்திரம் தமிழில் பேசுவது போன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

பராசக்தியில் நடித்தது வாழ்நாள் பெருமை: சிவகார்த்திகேயன்

ஈரான் - அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு - கத்தார் எச்சரிக்கை!

“ஜல்லிக்கட்டுனா.. எங்க ஊரு கயிறுதான்!” விறுவிறுப்பாக நடைபெறும் மூக்கணாங்கயிறு விற்பனை!

SCROLL FOR NEXT