முகப்பு
செய்திகள்

ஆண் குழந்தை: தகவல் தெரிவித்த எமி ஜாக்சன்!

தொழிலதிபர் ஜார்ஜ் பணயிவ்டெளவுடன் திருமண நிச்சயம் ஆன நிலையில் தற்போது கர்ப்பமாக உள்ளார் எமி ஜாக்சன்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:56 AM
பகிர்:

இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2010-ல் மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் அறிமுகமானார். பிறகு ஹிந்தி, தெலுங்கு, கன்னடத் திரையுலகங்களில் ஏராளமான படங்களில் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் தமிழில் விக்ரமுடன் ஐ படத்திலும், 2.0 படத்தில் ரஜினியுடனும் நடித்தார்.

தொழிலதிபர் ஜார்ஜ் பணயிவ்டெளவுடன் திருமண நிச்சயம் ஆன நிலையில் தற்போது கர்ப்பமாக உள்ளார் எமி ஜாக்சன். குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் அந்த நிகழ்ச்சியைக் கொண்டாடிய எமி ஜாக்சன், அதன்பிறகு இன்ஸ்டகிராமில் தனக்கு ஆண் குழந்தை பிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். 

எமி ஜாக்சனுக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த வருடத் தொடக்கத்தில் எமி - ஜார்ஜ் ஆகியோருக்கு இத்தாலியில் திருமணம் நடைபெறும் என்றும் அறியப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.