முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் நடிகை (படங்கள்)

கேங்க் லீடர் என்கிற தெலுங்குப் படத்தில் நடித்துக் கவனம் பெற்ற பிரியங்கா அருள் மோகன், இப்படத்தில் கதாநாயகியாகத் தமிழில் அறிமுகமாகிறார். 

Updated On : 3 டிசம்பர், 2019 at 2:18 PM
பகிர்:

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். டாக்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு இசை - அனிருத். சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸும் கேஜேஆர் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரிக்கின்றன. படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேங்க் லீடர் என்கிற தெலுங்குப் படத்தில் நடித்துக் கவனம் பெற்ற பிரியங்கா அருள் மோகன், இப்படத்தில் கதாநாயகியாகத் தமிழில் அறிமுகமாகிறார். 

பிரியங்காவின் தாய் - கன்னடம், தந்தை - தமிழ். இதனால் பிரியங்காவுக்கு நன்குத் தமிழ் பேச வரும். இப்படத்துக்கு தமிழ் பேசத் தெரிந்த கதாநாயகி தேவை என நெல்சன் விருப்பப்பட்டதால் பிரியங்காவின் தேர்வு சுலபமாக நடந்துள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.