படம் - @YouTubeIndia 
செய்திகள்

இந்திய அளவில் நெ.1, உலகளவில் 7-வது இடம்: யூடியூப் தளத்தில் சாதித்துள்ள ரெளடி பேபி பாடல்!

இந்த வருடம் யூடியூபில் அதிக டிரெண்டிங் ஆன விடியோக்களில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது

எழில்

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் - மாரி 2. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா. இந்தப் படத்தில் இடம்பெற்ற ரெளடி பேபி பாடலின் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, நடன இயக்குநர் பிரபுதேவாவுக்கும் நடிகை சாய் பல்லவிக்கும் அதிகப் பாராட்டுகள் கிடைத்தன.

கடந்த ஏப்ரல் மாதம், பில்போர்ட் யூடியூப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்து அசத்தியது. இதனால் சர்வதேச அளவில் இப்பாடலின் விடியோவுக்குக் கவனம் கிடைத்தது. மேலும் யூடியூப் தளத்தில், தமிழ்ப் பாடல்களில் அதிகப் பார்வைகள் பெற்ற பாடல் என்கிற சாதனையையும் அடைந்தது. ஏப்ரல் மாதம், யூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் 400 மில்லியன் அதாவது 40 கோடி பார்வைகளைப் பெற்று அசத்தியது. இதனால் யூடியூபில் இந்த எண்ணிக்கையைத் தொட்ட முதல் தென்னிந்தியப் பாடல் என்கிற பெருமையையும் அடைந்தது. தனுஷ் - அனிருத் கூட்டணியில் உருவான கொலவெறி பாடலும் சாய் பல்லவியின் முதல் தெலுங்குப் படமான ஃபிடாவில் இடம்பெற்ற வச்சிண்டே பாடலும் முறையே 179 மில்லியன் பார்வைகளும் 196 மில்லியன் பார்வைகளும் அப்போது பெற்றிருந்தன. அந்த எண்ணிக்கைகளைச் சுலபமாகத் தாண்டியது ரெளடி பேபி பாடல். தற்போது இந்தப் பாடலுக்கு யூடியூபில் 72 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன. 

இந்நிலையில் இந்த வருடம் யூடியூபில் அதிக டிரெண்டிங் ஆன விடியோக்களில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது ரெளடி பேபி பாடல். இதுதவிர உலகளவில் அதிகம் பேர் பார்த்த விடியோக்களில் ரெளடி பேபிக்கு 7-ம் இடம் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் பிறந்த நாள்: பாஜக கொண்டாட்டம்

பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து போராட்டம்

தீபாவளி பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இந்நாள், முந்நாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணபத்திரம் தாக்கல்

பாமக நிறுவனா் ராமதாஸ் தரப்பில் தோ்தல் ஆணையத்திடம் புகாா் மனு

SCROLL FOR NEXT