செய்திகள்

இப்படி ஒரு மோசமான ட்ரெய்லரா? பெண்ணியவாதிகளின் கோபத்துக்கு உள்ளான ஓவியா நடிப்பில் 90 எம்.எல் வைரலாகிய ட்ரெய்லர் இதுதான்!

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள படம் 90 எம்.எல். இந்தப் படத்தில்  இரட்டை அர்த்த வசனங்களைக் அதிகம் இருந்ததால் தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

சினேகா


அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள படம் 90 எம்.எல். இந்தப் படத்தில்  இரட்டை அர்த்த வசனங்களைக் அதிகம் இருந்ததால் தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. அனிதா உதீப், இதற்கு முன்பு குளிர் 100 டிகிரி படத்தை இயக்கியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பிறகு ஓவியா நடித்த படம் என்பதால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் இது :


களவாணி படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமாகியவர் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு வேற லெவல் ரசிகர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகளவில் தோன்றினார்கள். ஓவியா ஆர்மி உருவாகும் அளவிற்கு பிரலமாகிய ஓவியா நான்கைந்து படங்களில் பிஸியாக நடித்து வந்தார். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று பேட்டியளித்துள்ளார். அத்தகைய ஹீரோயினை மையப்படுத்தி எடுத்த படம் என்பதால் 90 எம் எல் படத்தில் நடித்தேன் என்றும் கூறியிருக்கிறார் ஓவியா.

ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா 3, சற்குணம் இயக்கத்தில் களவாணி 2 மற்றும் பிக் பாஸ் புகழ் ஆரவுடன் ‘ராஜபீமா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் அண்மையில் வெளியான 90 எம் எல் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த பலர் முகம் சுளிக்கும்படியான காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளதை அடுத்து பெண்ணியவாதிகள் இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தங்கள் கோபத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி படத்தில் கொலை செய்யப்படுவேனா? ஷ்ருதி ஹாசன் விளக்கம்!

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

வெள்ளத்தால் உருக்குலைந்த கிராமம்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Uttarakhand | Cloud Burst

சிவகார்த்திகேயன் குரலில் ஓ காட் ஃபியூட்டிஃபுல் பாடல்!

SCROLL FOR NEXT