முகப்பு
செய்திகள்

காலை 5 மணி காட்சியுடன் பிப்ரவரி 22 அன்று வெளியாகும் ஓவியாவின் 90 எம்.எல்!

இரட்டை அர்த்த வசனங்களும் முத்தக் காட்சிகளும் அதிகமாக அதில் இடம்பெற்றுள்ளதால் பலத்த சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.... 

Updated On : 13 பிப்ரவரி 2019, 11:02 am IST
பகிர்:

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள படம் 90 எம்.எல். படம் இரட்டை அர்த்த வசனங்களைக் கொண்டுள்ளதால் தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இசை - சிம்பு.

இயக்குநர் அனிதா உதீப், இதற்கு முன்பு குளிர் 100 டிகிரி படத்தை இயக்கியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பிறகு ஓவியா நடித்த படம் என்பதால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இரட்டை அர்த்த வசனங்களும் முத்தக் காட்சிகளும் அதிகமாக அதில் இடம்பெற்றுள்ளதால் பலத்த சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. இதையடுத்து இந்தப் படம் பிப்ரவரி 22 அன்று வெளியாகும்  எனத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதும். மேலும் காலை 5 மணிக்கு முதல் காட்சி ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.