செய்திகள்

மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற மெக்ஸிகோவின் ரோமா!

DIN

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் உள்ளிட்ட மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது மெக்ஸிகோவின் ரோமா படம். 

Never Look Away (Germany), Shoplifters (Japan), Capernaum (Lebanon), Roma (Mexico), Cold War (Poland) ஆகிய படங்கள் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. இதில் ரோமா விருதைத் தட்டிச் சென்றது. 

சிறந்த இயக்குநருக்கான பிரிவில், ஸ்பைக் லீ (திரைப்படம்-பிளாக்கிளான்ஸ்மேன்), வெல் பவ்லிகோஸ்கி (கோல்ட் வார்), யோர்கோஸ் லந்திமோஸ் (தி ஃபேவரிட்), அல்ஃபோன்ஸோ குவரோன் (ரோமா), ஆடம் மெக்கே (வைஸ்) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதில் ரோமா படத்தை இயக்கிய அல்ஃபோன்ஸோ குவரோன் சிறந்த இயக்குநருக்கான விருதைத் தட்டிச் சென்றார். அதேபோல சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதும் அல்ஃபோன்ஸோ குவரோனுக்குக் கிடைத்துள்ளது.

இதன்மூலம் மெக்ஸிகோ படமான ரோமா, மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. 

எனினும்  சிறந்த படத்துக்கான பிரிவிலும் ரோமா படம் பரிந்துரைக்கப்பட்டது. இதில் கிரீன் புக் விருதைத் தட்டிச் சென்றது. 90 வருட ஆஸ்கர் வரலாற்றில் அமெரிக்கப் படங்களைத் தவிர வேறு எந்த நாட்டுப் படங்களும் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றதில்லை. 10 படங்கள் மட்டுமே சிறந்த படத்துக்கான விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

கடந்த வருடம் வெளியான மெக்ஸிகோ நாட்டுப் படமான ரோமாவை அல்ஃபோன்ஸோ குவரோன் இயக்கியுள்ளார். யாலிட்சா, மரினா போன்றோர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை இயக்கியதுடன் மட்டுமல்லாமல் ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் செய்து தயாரித்தும் உள்ளார் அல்ஃபோன்ஸோ. ரோமா படம் ஆஸ்கர் விருதுகளில் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு 3 விருதுகளை வென்றுள்ளது. கடந்த வருடம் நவம்பர் 21 அன்று அமெரிக்காவில் குறைந்த திரையரங்குகளில் வெளியாகி, பிறகு நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT