செய்திகள்

வெளியானது இயக்குநர் ராம் - நடிகர் மம்முட்டி கூட்டணியில் உருவாகியுள்ள 'பேரன்பு' ட்ரைலர்  

இயக்குநர் ராம் - நடிகர் மம்முட்டி கூட்டணியில் உருவாகியுள்ள 'பேரன்பு' திரைப்பட ட்ரைலர் வெளியானது  

DIN

சென்னை: இயக்குநர் ராம் - நடிகர் மம்முட்டி கூட்டணியில் உருவாகியுள்ள 'பேரன்பு' திரைப்பட ட்ரைலர் வெளியானது  

கற்றது தமிழ், தங்க மீன்கள் எனப் படத்துக்குப் படம் தமிழ் ரசிகர்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருபவர் இயக்குநர் ராம். இவரின் அடுத்தப் படமாக உருவாகியுள்ள பேரன்பு வெளிவருவதற்கு முன்பே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படம் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 

மம்மூட்டி, சரத்குமார், அஞ்சலி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். தங்க மீன்கள் படப் புகழ் பேபி சாதனா மம்மூட்டியின் மகளாக நடித்துள்ளார். நா. முத்துக்குமாரின் மறைவால் தற்போது ராம் - யுவன் - வைரமுத்து என்கிற புதிய கூட்டணி ஒன்று இந்தப் படத்தில் உருவாகியுள்ளது. கருணாகரன், சுமதி ராம் ஆகியோரும் பாடல்கள் எழுதியுள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'பேரன்பு' திரைப்பட ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

SCROLL FOR NEXT