செய்திகள்

விஜய் டிவியில் 20 வருடங்கள் பணி நிறைவு: டிடி உருக்கம்!

13 வயதில் விஜய் டிவியில் ஆடிஷனுக்கு சென்ற நான் இன்றுவரை அங்குப் பணிபுரிகிறேன்...

எழில்

விஜய் டிவியில் கடந்த 20 வருடங்களாகப் பணியாற்றி வருகிறார் பிரபல தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. 

இந்த அரிதான விஷயம் குறித்து ட்விட்டரில் தன் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார் டிடி. அதில் அவர் கூறியதாவது:

13 வயதில் விஜய் டிவியில் ஆடிஷனுக்கு சென்ற நான் இன்றுவரை அங்குப் பணிபுரிகிறேன். பலருடைய கொண்டாட்டங்களில் நான் பங்கேற்றுள்ளேன். இப்போது நானே கொண்டாடிக்கொண்டிருக்கிறேன். கடந்த 20 வருடங்களில் பல ஏற்ற இறக்கங்களைப் பார்த்துள்ளேன். விஜய் டிவி உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ரசிகர்களின் அன்பினால் இன்னும் 20 வருடங்கள் தொடர்வேன், என் வாழ்வின் அடுத்தக்கட்டத்திலும் உங்களை மகிழ்விப்பேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT