செய்திகள்

முதன்முறையாக பெண் இயக்குநருடன் இணையப் போகும் நடிகர் சூர்யா  

நடிகர் சூர்யா  முதன்முறையாக பெண் இயக்குநர் ஒருவருடன் இணைந்து பணிபுரிய உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. 

DIN

சென்னை: நடிகர் சூர்யா  முதன்முறையாக பெண் இயக்குநர் ஒருவருடன் இணைந்து பணிபுரிய உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. 

நடிகர் சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார் லண்டனில் தொடங்கிய முதல் கட்ட படப்பிடிப்பு, தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 

சூர்யா ஜோடியாக சயிஷா சைகல் நடிக்க, மோகன்லால், பாலிவுட் நடிகர் பொமன் இரானி, ஆர்யா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி இந்தப் படத்திலும் தொடர்கிறது. .

இந்நிலையில் நடிகர் சூர்யா  முதன்முறையாக பெண் இயக்குநர் ஒருவருடன் இணைந்து பணிபுரிய உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது
 
‘காப்பான்’ படத்துக்குப் பிறகு, ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். சூர்யாவின் சொந்த நிறுவனமான  2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT