முகப்பு
செய்திகள்

8 வருடங்களுக்குப் பிறகு தனுஷை இயக்குகிறார் செல்வராகவன்!

வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் தற்போது நடித்து வருகிறார் தனுஷ்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:26 AM
பகிர்:

8 வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் தற்போது நடித்து வருகிறார் தனுஷ். மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளார். கார்த்திக் சுப்புராஜ், ராம்குமார், துரை செந்தில்குமார் ஆகிய இயக்குநர்களின் படங்களிலும் அவர் நடிக்கவுள்ளார். இவை அனைத்தும் முடிந்தபிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார்.

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷை இயக்கவுள்ளார் செல்வராகவன். தனுஷ் பல படங்களை முடிக்கவேண்டியுள்ளதால் செல்வராகவனுடன் இணையும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம்தான் தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.