நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், ஹவுஸ் ஓனர் என்கிற படத்தை இயக்கியுள்ளார். ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இதற்கு முன்பு அவர் இயக்கியுள்ளார். பசங்க கிஷோர், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின், கிஷோர், விஜி சந்திரசேகர் போன்றோர் இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இசை - ஜிப்ரான்.
ஜூன் 28 அன்று வெளிவரவுள்ள இப்படம் குறித்து இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது:
சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடந்த உண்மையான சம்பவம் மற்றும் உண்மையான மனிதர்களின் தாக்கத்தில் உருவான கதை - ஹவுஸ் ஓனர்.
நடிகர்களும் குழுவினர்களும் குறைவான ஊதியம் மற்றும் வசதிகளுக்கு ஒப்புக்கொண்டார்கள். இதனால் அனைத்து நிதியும் தரமான படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்பட்டது. 50 லட்சம் செலவில் செட் அமைக்கப்பட்டது. இந்தப் படம் அட்மாஸில் மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. உங்கள் ஆதரவையும் உற்சாகத்தையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.