செய்திகள்

பாகுபலி பிரபாஸின் அடுத்த பிரமாண்டம்: சாஹூ ஷூட்டிங் காட்சிகள் வெளியீடு

இப்படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் ஷ்ரத்தா கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

Raghavendran

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் பிரமாண்ட திரைப்படமாக சாஹூ உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.150 கோடிகளாகும்.

பாகுபலி 2 பாகம் திரைப்படங்களைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால் சாஹூ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை சுஜீத் எழுதி, இயக்குகிறார். பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் இளம் நாயகி ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஈவ்லின் ஷர்மா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.  ஷங்கர்-இசான்-லாய் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

2017 ஜூன் மாதம் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் பாணியில் உயர்தர தொழில்நுட்பங்களுடன் தயாராகும் சாஹூ, ஆகஸ்ட் 15, 2019 அன்று வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் ஷ்ரத்தா கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT