செய்திகள்

இனிமேல் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்த மாட்டேன்: லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம்!

எந்தவொரு தொலைக்காட்சியிலும் அந்த நிகழ்ச்சியை நான் நடத்தப்போவதில்லை என நான் தெளிவுபடுத்துகிறேன்...

எழில்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாவதில்லை. இந்நிலையில் மற்றொரு தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொடரவுள்ளதாக வெளியான செய்திக்கு அவர் பதில் அளித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

நான் இன்னொரு தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியைத் தொடரவுள்ளதாக ஒரு வதந்தி உள்ளது. அப்படி எந்தவொரு தொலைக்காட்சியிலும் அந்த நிகழ்ச்சியை நான் நடத்தப்போவதில்லை என நான் தெளிவுபடுத்துகிறேன். அந்த நிகழ்ச்சிக்காக நான் சிறப்பாகப் பணியாற்றினேன். அது முடிந்துவிட்டது. ஜீ தமிழ் தொலைக்காட்சியுடனான அற்புதமான காலம் அது. மற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் என்னை அணுகினார்கள். ஆனால் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை மீண்டும் தொடரமாட்டேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

SCROLL FOR NEXT