செய்திகள்

வெளியானது நயன்தாராவின் 'ஐரா' ட்ரைலர் 

நடிகை நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ளாள் புதிய திரைப்படமான ஐராவின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

DIN

சென்னை: நடிகை நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ளாள் புதிய திரைப்படமான ஐராவின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில், கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ஐரா. இந்தப் படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா எனத் தொடர்ந்து கதாநாயகியை மையப்படுத்தும் கதைகளில் நடித்து அசத்தி வரும் நயன்தாராவுக்கு இந்தப் படம் ஒரு மைல் கல்லாக அமையும் என்கின்றனர் படக்குழுவினர்.

சர்ச்சைகளையும் அதே சமயம் அதிகளவு கவனம் பெற்ற குறும்படங்களான ‘லட்சுமி’மற்றும் ‘மா’ ஆகியவற்றை இயக்கிய சர்ஜுன்.கே.எம். இப்படத்தை இயக்கியுள்ளார். நடிகர் ஜெயபிரகாஷ், கலையரசன், யோகிபாபு, லீலாவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் நயன்தாரா பவானி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவின் உடல்மொழி, நடிப்பு, தோற்றம் என எல்லாவற்றிலும் ஒரு மாற்றம் இருக்கும் என இயக்குநர் சர்ஜுன் கூறினார்.

இந்த கதாபாத்திரத்தின் தோற்றத்துக்காக முகத்தில் கருப்பு நிற மேக் அப் போட்டுள்ளார் நயன்தாரா.

யமுனா என்ற இன்னொரு கதாபாத்திரத்தில் வடிவமைத்துள்ளனர். இரட்டை வேடம் என்றாலும் இரண்டும் வெவ்வேறு கதாபாத்திரங்கள், இரட்டையர் அல்ல, என்றனர் படக்குழுவினர். ஹாரர் வகைமையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் பெண் சிசுக் கொலைதான் மையக் கதை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் புதனன்று வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானிசாகர் அணை நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT