செய்திகள்

2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்!

எழில்

அக்‌ஷய் குமார், பரினீதி சோப்ரா நடிப்பில் அனுராக் சிங் இயக்கத்தில் நேற்று வெளியான படம் - கேசரி. இப்படத்தின் இணை தயாரிப்பாளர் கரன் ஜோஹர். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் 36-வது சீக்கியப் படையைச் சேர்ந்த 21 வீரர்கள், 10000 பேர் இணைந்த ஆப்கன் தாக்குதலை எதிர்கொண்ட விதம்தான் இப்படத்தின் மையக்கரு. 

சராகர்ஹி சண்டை என்று நினைவுகூரப்படும் இந்த வரலாற்றுச் சம்பவத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கேசரி படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 21.50 கோடி வசூலை அடைந்துள்ளது. 2019-ம் ஆண்டில் வேறெந்த ஹிந்திப் படமும் இந்த வசூலை அடையவில்லை. இதற்கு முன்பு கல்லிபாய் ரூ. 19.40 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்தது. கேசரி படம் இந்தியாவில் 3600 திரையரங்குகளிலும் மற்ற நாடுகளில் 600 திரையரங்குகளிலும் என ஒட்டுமொத்தமாக 4200 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

அக்‌ஷய் குமார் படங்களில் அதிக முதல் நாள் வசூல் கண்ட படம் - கோல்ட். இது முதல்நாளன்று ரூ. 25.25 கோடி வசூலித்தது. அதற்கடுத்த பெரிய வசூலைக் குவித்துள்ளது கேசரி படம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT