செய்திகள்

சின்னத்திரை என்பது எனக்குப் புதிது! சீரியலில் நடிக்கவிருக்கும் நடிகை!

1984-ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நதியா. 1985-ஆம் ஆண்டு "பூவே பூச்சுடவா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார்

DIN

1984-ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நதியா. 1985-ஆம் ஆண்டு 'பூவே பூச்சுடவா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். தொடர்ந்து 'மந்திரப் புன்னகை', 'நிலவே மலரே', 'ராஜாதிராஜா' உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அதே போல் மலையாள சினிமாவில் தடம் பதித்தார்.

திருமணத்துக்குப் பின் சினிமாவிலிருந்து ஒதுங்கிய நதியா, தன்னைத் தேடி வரும் ஒரு சில கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். அந்த விதத்தில் 'எம்.குமரன்',                  'சண்டை','பட்டாளம்' உள்ளிட்டப் படங்கள் மூலம் கவனம் ஈர்த்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழுக்குத் திரும்பியிருக்கிறார். இந்த முறை சின்னத்திரை மூலம் வருகிறார். சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் 'ரோஜா' மெகா தொடரில் அவருக்கெனப் பிரத்யேக கதாபாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் பேசும் போது...' சின்னத்திரை என்பது எனக்குப் புதிது. இதற்கு முன்னர் தொடர்கள் நடிக்கக் கேட்டு ஏராளமான வாய்ப்புகள் வந்தன. எதையும் நான் ஏற்கவில்லை. இதில் சிறப்புத் தோற்றம் ஏற்றுள்ளேன். தமிழ் ரசிகர்களை அவர்களின் இல்லங்ளுக்கே சென்று சந்திப்பதில் மகிழ்ச்சி. சினிமாவில் நடிப்பது பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. மனதுக்குப் பிடித்த கதாபாத்திரம் வந்தால் பார்க்கலாம்' என்றார் நதியா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

SCROLL FOR NEXT