செய்திகள்

அமில வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் வேடத்தில் நடிக்கும் தீபிகா படுகோன்!

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இதன் ஃபர்ட்ஸ் லுக் போஸ்டரும்...

எழில்

ஒரு தலையாக காதலித்தவனின் காதலை ஏற்க மறுத்ததால் தனது 15-ஆவது வயதில் அமிலம் வீச்சுக்கு ஆளான லட்சுமி அகர்வால், தன்னம்பிக்கையுடன் போராடி அவனுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கி தந்தார். இதற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாராட்டுதலைப் பெற்ற லட்சுமி அகர்வால், சில ஆண்டுகள் கழித்து அலோக் தீட்சித் என்பவரை திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்கு தாய் ஆனார். தன்னைப் போன்று அமிலம் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சமீபத்தில் சண்டிகரில் சமூக அமைப்பொன்றை லட்சுமி அகர்வால் துவங்கினார். 

இப்போது இவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பிரபல இயக்குநர் மற்றும் கவிஞருமான குல்சாரின் மகள் மேக்னா குல்சார் திரைப்படமொன்றை தயாரித்துள்ளார். லட்சுமி அகர்வால் வேடத்தில் பிரபல நடிகை தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார். சபாக் (Chhapaak) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இதன் ஃபர்ட்ஸ் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

சபாக், அடுத்த வருடம் ஜனவரி 10 அன்று வெளிவரவுள்ளது.

லட்சுமி அகர்வால்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

SCROLL FOR NEXT