செய்திகள்

ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது விஜய் ஆன்டனியின் தமிழரசன்!

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  தமிழரசன்.

DIN

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  தமிழரசன். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ் கோபி ராதாரவி சோனு சூட், யோகி பாபு, சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்..

ஒளிப்பதிவு - ஆர்.டி.ராஜசேகர்
இசை - இளையராஜா
பாடல்கள் - பழனிபாரதி, ஜெய்ராம்
கலை - மிலன்
ஸ்டண்ட் - அனல் அரசு
எடிட்டிங் - புவன் சந்திரசேகர்
நடனம் - பிருந்தா சதீஷ்
தயாரிப்பு மேற்பார்வை - ராஜா ஸ்ரீதர்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் - பாபு யோகேஸ்வரன்
தயாரிப்பு  -    கெளசல்யா ராணி

படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடை பெற்றது. இரண்டு கட்டமாக நடைபெற்ற படப்பிடிப்பு முடிவடைந்தது. இன்னும் சில நாட்களில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கி முடிவடைய உள்ளது. ஆக்‌ஷன் படமாக தமிழரசன் உருவாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT