செய்திகள்

மே மாதம் வெளியாகவுள்ள முக்கியமான தமிழ்ப் படங்கள்!

புதிய படங்களுக்குத் திரையரங்கு உரிமையாளர்களிடமும் ரசிகர்களிடமும் எந்தளவுக்கு வரவேற்பு இருக்கும் என...

எழில்

இந்த மே மாதம் குறைந்தபட்சம் 20 தமிழ்ப்படங்கள் வெளிவரவுள்ளன. 

கடந்த மாதம் காஞ்சனா 3 உள்ளிட்ட பெரிய நடிகர்கள், இயக்குநர்களின் தமிழ்ப் படங்கள் குறைவாகவே வெளிவந்தன. பள்ளி - கல்லூரித் தேர்வுகள், மக்களவைத் தேர்தல், ஐபிஎல் எனப் பல காரணங்கள் இதற்குச் சொல்லப்பட்டன. ஆனால் இந்த மாதம் கிட்டத்தட்ட 20 தமிழ்ப் படங்கள் வெளிவரத் தயாராகவுள்ளன. காஞ்சனா 3, அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் ஆகிய இரு படங்களும் நல்ல வசூலைப் பெற்று வருவதால் புதிய படங்களுக்குத் திரையரங்கு உரிமையாளர்களிடமும் ரசிகர்களிடமும் எந்தளவுக்கு வரவேற்பு இருக்கும் என இனிமேல் தான் தெரியவரும்.

மே 10

விஷாலின் அயோக்யா
விஜய் ஆண்டனியின் கொலைகாரன்

மே 17

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல்
விஜய் சேதுபதியின் சிந்துபாத்

மே 31

சூர்யாவின் என்ஜிகே
விக்ரமின் கடாரம் கொண்டான்

மே மாதம் வெளியாகும் இதரப் படங்கள்

ஜீவாவின் கொரில்லா, கீ
அதர்வா முரளியின் 100
பிரபு தேவாவின் தேவி 2
ஜிவி பிரகாசின் 100 பர்செண்ட் லவ்
விமலின் களவாணி 2
லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர்
தும்பா
நீயா 2
லிசா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலைவாய்ப்புத் துறை மூலம் 22 போ் அரசுப்பணிக்கு தோ்வு

ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

பிப். 14 வரை காஞ்சிபுரத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்

டாடா ஆலை திறப்பு விழாவில் முதல்வா் பங்கேற்பு: அமைச்சா் காந்தி ஆய்வு

சிலம்பப் போட்டி: ஆற்காடு மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT