செய்திகள்

பாண்டிராஜ் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் அனு இம்மானுவேல்! 

தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள அனு இம்மானுவேல், தமிழில் இதற்கு முன்பு, துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார்...

எழில்

கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. 

இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இமான் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார். கடந்த வருடம் வெளியான பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா ஆகிய படங்களுக்கு இமான் இசையமைத்திருந்தார். 

இந்நிலையில் இந்தப் படத்தில் கதாநாயகியாக அனு இம்மானுவேல் தேர்வாகியுள்ளார். தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள அனு இம்மானுவேல், தமிழில் இதற்கு முன்பு, துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார். 

இந்தப் படத்தில் மேலும் - ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, யோகி பாபு போன்றோரும் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி, குடியிருப்புப் பகுதியில் திரியும் குரங்குகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்

விராலிமலையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்

நவ.17-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா் பணிக்கான நோ்காணல்

சந்திரமெளலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT