முகப்பு
செய்திகள்

விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு: இந்தமுறை அதிர்ஷ்டம் கிடைக்குமா ராஷ்மிகாவுக்கு?

படக்குழுவினர் ராஷ்மிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் இந்தமுறை விஜய் படத்தில் அவர் இடம்பெறுவார் என்கிற எதிர்பார்ப்பு...

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:01 AM
பகிர்:

கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகா மந்தனா, 2016-ல் வெளியான கிரிக் பார்ட்டி என்கிற கன்னப் படமாகத் திரையுலகில் அறிமுகமானார். சமீபத்தில் வெளியான கீத கோவிந்தம் என்கிற தெலுங்குப் படத்தின்  ‘இன்கேம் இன்கேம் காவாலே’ பாடலில் நடித்து மேலும் புகழை அடைந்தார். 

தற்போது, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர் அந்தப் படத்தில் நடிக்கவில்லை. இதையடுத்து ட்விட்டரில் இவ்வாறு கூறினார் ராஷ்மிகா: விஜய் - அட்லி படத்தில் நான் நடிக்கிறேனா எனப் பலரும் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இந்தமுறை அது நடக்காததால் அவர்களுடன் அடுத்த முறை இணைவேன் என எண்ணுகிறேன். உங்களிடமிருந்து கிடைத்த ஆதரவு என்னை மிகவும் சந்தோஷமாக்குகிறது. தமிழில் விரைவில் அறிமுகமாவேன். உங்கள் அன்புக்கு நன்றி எனக் கூறினார். இதையடுத்து, பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.

இந்நிலையில் அட்லி படத்துக்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். அந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. படக்குழுவினர் ராஷ்மிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் இந்தமுறை விஜய் படத்தில் அவர் இடம்பெறுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →