நடிகர் சூரிக்கு மதுரையில் மூன்று உணவகங்கள்: கிளைகளைத் திறந்து வைத்த சிவகார்த்திகேயன் (படங்கள்)
பிரபலங்கள் உணவுத் தொழிலில் ஈடுபடுவது புதிதல்ல. நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் சொந்தமாக உணவகங்களை வைத்துள்ளார்கள்.
பிரபலங்கள் உணவுத் தொழிலில் ஈடுபடுவது புதிதல்ல. நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் சொந்தமாக உணவகங்களை வைத்துள்ளார்கள்.
இந்நிலையில் நடிகர் சூரி, அம்மன் என்கிற உணவகத்தை மதுரையில் 2017-ல் தொடங்கினார். அந்த உணவகத்துக்கு மக்கள் அளித்த வரவேற்பினால் உற்சாகமாகி தற்போது அதே மதுரையில் இரு கிளைகளைத் தொடங்கியுள்ளார். மதுரை அவனியாபுரம் ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் அம்மன் - சைவ உணவகம், அய்யன் - அசைவ உணவகம் என இரு கிளைகளைத் தொடங்கியுள்ளார். இந்த இரு கிளைகளையும் சூரியின் நெருங்கிய நண்பரும் பிரபல நடிகருமான சிவகார்த்திகேயன் இன்று திறந்து வைத்துள்ளார்.