செய்திகள்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு எப்போது விருது வழங்கப்படுகிறது?

எழில்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சா்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-ஆவது சா்வதேச திரைப்பட விழா கோவாவில் வருகிற 20-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 9 நாள்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

சா்வதேச திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த திரைப்பட கலைஞா்களை கெளரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நடிகா், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞா்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பிரபல ஹிந்தி நடிகா் அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கோவா சா்வதேச திரைப்பட விழாவை சிறப்பாக கொண்டாட மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை சாா்பில் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.  50-ஆவது ஆண்டு சா்வதேச திரைப்பட விழாவின் கெளரவ விருதை நடிகா் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது. இது தொடா்பாக மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது: இந்திய சினிமாவுக்கு கடந்த பல ஆண்டுகளாக நடிகா் ரஜினிகாந்த் செய்து வரும் தன்னிகரற்ற பங்களிப்பையும், சேவையையும் கெளரவித்து அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ என்ற விருதை அவருக்கு அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். 

இந்நிலையில் நவம்பர் 20 அன்று நடைபெறவுள்ள தொடக்க விழாவில் ரஜினியும் அமிதாப் பச்சனும் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். இத்தகவலை மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் நேற்று தெரிவித்துள்ளார். இதனால் தொடக்க விழாவில் ரஜினிக்குச் சிறப்பு விருது வழங்கப்படும் எனத் தெரிகிறது. கோவா திரைப்பட விழாவை அமிதாப் பச்சன் தொடங்கி வைக்கிறார். பாடகரும் இசையமைப்பாளருமான ஷங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியும் தொடக்க விழாவில் நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT