Room Tamil Movie 
செய்திகள்

ஒரு அறைக்குள் முழுப் படமும் நடக்கும் கதை ரூம்!

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் அஸ்வின் கே.வின் மார்ச் 30 நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் படம் 'ரூம்'. 

DIN

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் அஸ்வின் கே.வின் மார்ச் 30 நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் படம் 'ரூம்'. 

'அம்முவாகிய நான்', 'நேற்று இன்று' படங்களை இயக்கிய  பத்மாமகன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகி வருகிறது. அபிஷேக் வர்மா,   மனோசித்ரா நடிக்கின்றனர். 

படத்தின் பெரும் பகுதி காட்சிகள்,  ஒரு பாத்ரூமுக்குள் நிகழ்வதாகத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 

த்ரில்லர் பாணியில் கதை உருவாகியுள்ளது. ஒரு அறைக்குள் முழுப் படமும் நடப்பதால், இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சர்யமான அனுபவமாக இருக்கும். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். தெலுங்கு சினிமாவில் பிரபலமான வினோத் யஜமான்யா இப்படத்துக்கு இசையமைக்கிறார். சி.எஸ்.பிரேம் படத்தொகுப்பு செய்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து,  இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT