செய்திகள்

ரஜினியின் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக..

DIN


சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள அடுத்த படத்துக்கு டி. இமான் இசையமைக்கவுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் தர்பார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் சமயத்தில் வெளிவரவுள்ளது. முருகதாஸ் படத்துக்கு அடுத்ததாக சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

விஸ்வாசம் படத்துக்குப் பிறகு சிவா இயக்கவுள்ள படம் இது. ரஜினி - சிவா கூட்டணி சேரும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. தற்காலிகமாக 'தலைவர் 168' என அழைக்கப்பட்டு வரும் இப்படம் 2020 தீபாவளிக்கு வெளிவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்துக்கு டி. இமான் இசையமைக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம், டி. இமான் முதன்முறையாக ரஜினி படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.

முன்னதாக, விஸ்வாசம் படத்தின் பாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்ததால், ரஜினியை இயக்கும் படத்துக்கும் இமானே இசையமைக்க வேண்டும் என்று இயக்குநர் சிவா விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT