செய்திகள்

முதன்முதலில் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்த தருணம்: ஸ்ருதி ஹாசன்

சரோஜினி

ஷ்ருதி ஹாசன், தெலுங்கு நடிகையும் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகளுமான லஷ்மி மஞ்சுவுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் அவரது வாழ்வின் அழகிய தருணங்கள் சிலவற்றைப் பற்றிப் பகிர்ந்திருந்தார். ஷ்ருதியின் பதில்கள் பெரும்பாலும் நேர்மையானவையாகவே இருந்தன.

ரிலேஷன்ஷிப் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில்;

ஒரே ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தது நிஜம். ஆனால், அது முறிந்து விட்டதே என்ற கவலை எல்லாம் எனக்கு இல்லை. நடந்தது அனைத்தும் மகிழ்வான தருணங்களே. அதனால் வருத்தங்கள் ஏதும் இல்லை. காதலுக்கு என்று தனியாகச் செலவழிக்க என்னிடம் நேரமில்லாதது தான் குறை. இப்போது உழைக்க வேண்டிய தருணம். எனவே அதில் கவனம் செலுத்துகிறேன். அப்படியும் சில நேரங்களில் எனக்குள் தனிமையாக உணர்வேன் நான். அப்போது தோன்றும்.. ஒரே நேரத்தில் 7, 8 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்களாகவும் இருக்கின்றன. அதற்காக விருதுகள் கிடைக்கின்றன. ஆனாலும், ஏன் ஏதோ ஒரு ஏமாற்ற உணர்வில் இருக்கிறேன் என்று யோசித்துப் பார்ப்பேன்.

ஆண்கள் காரணமா? என்றால் நிச்சயமாக இல்லை. Boys are Stupid! (வேடிக்கையாகச் சொல்லி விட்டு சிரிக்கிறார்). அப்படி எதுவும் இல்லை.  பிறகு வேறென்ன என்று யோசிக்கும் போது..  அப்போது தான் தெரிகிறது நான் இசையை எவ்வளவு தூரம் மிஸ் பண்ணுகிறேன் என்று. எனவே கமிட்டான வேலைகளை முடித்து விட்டு இசைக்கு என்று பிரத்யேகமாக நேரம் ஒதுக்குகிறேன். அதனால் தான் இடையில் எங்கே ஷ்ருதியைக் காணோம் என்று இங்கே தேடும் அளவுக்கு இடைவெளியாகி விடுகிறது. அதனால் பரவாயில்லை. மக்களை எண்டர்டெயின் செய்வது எனக்குப் பிடிக்கும் என்றாலும் இசை தான் என் ஆதர்ஷம் என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். என்கிறார்.

சரி அதை விடுங்கள், முதன்முதலில் ஒரு பையனைப் பார்த்ததும் மனம் மக்ழ்ச்சியில் துள்ளி வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறந்த தருணம் என்று ஒன்று எல்லோருக்கும் வாய்த்திருக்கும். உங்களுக்கு அப்படி முதன் முதலாக எப்போது நேர்ந்தது என்று நினைவிருக்கிறதா? 

என்ற கேள்விக்கு ஷ்ருதி அளித்த பதில்;

அப்படியான நினைவுகள் என்றால் எதைச் சொல்வது. கிண்டர் கார்ட்டன் அனுபவத்தைத் தான் சொல்ல வேண்டும். அப்போது வகுப்பில் புதிதாக ஒரு மாணவன் வந்து சேர்ந்திருந்தான். அவன் ஒரு அமெரிக்கன். பளீர் வெள்ளை நிறத்தில்... நீலக் கண்களுடன் வித்தியாசமாக இருந்த அவனைக் கண்டதும் எனக்கு மிகப் பிடித்து விட்டது. வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்த தருணம் என்றால் அதைத்தான் குறிப்பிட வேண்டும். அம்மா... அது எனக்கு வேணும்! என்கிற மாதிரியான உணர்வு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

SCROLL FOR NEXT