முகப்பு
செய்திகள்

இந்த வாரம் வெளியாகவுள்ள 5 தமிழ்ப் படங்கள்!

இந்த ஐந்து படங்களில் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்துக்கு அதிக வரவேற்பு கிடைக்கும்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:18 PM
பகிர்:

இந்த வாரம் ஐந்து தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.

எனை நோக்கி பாயும் தோட்டா, மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், அடுத்த சாட்டை, அழியாத கோலங்கள் 2,  தீமைக்கும் நன்மை செய் என ஐந்து தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் - எனை நோக்கி பாயும் தோட்டா. இசை - தர்புகா சிவா. இதன் படப்பிடிப்பு 2016-ல் தொடங்கி, செப்டம்பர் 2018-ல் முடிந்தது. தணிக்கையில் இந்தப் படம் யு/ஏ பெற்றுள்ளது. படத்தைத் தயாரித்த நிறுவனத்துக்குச் சில கடன்கள் நிலுவையில் இருந்ததால் இப்படத்தின் வெளியீடு பலமுறை தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பலமுறை தாமதமான இப்படத்தின் வெளியீட்டுக்கு ஒரு தீர்வு சமீபத்தில் கிடைத்தது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் இப்படத்தை வெளியிட முடிவு செய்து, நவம்பர் 29 அன்று எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

Advertisement

பிக் பாஸ் புகழ் ஆரவ், ராதிகா நடிப்பில் சரண் இயக்கியுள்ள படம் - மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ். வட சென்னை டான் ஆக ராதிகா இந்தப் படத்தில் நடித்துள்ளார். காவ்யா தபார், நிகேஷா படேல், யோகி பாபு, ரோஹிணி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சைமன் கிங். 

இந்த ஐந்து படங்களில் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்துக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. முன்பதிவு செய்வதில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments