செய்திகள்

அட்லி இயக்கத்தில் ராஜா ராணி பட கெட்டப்பில் மீண்டும் நயன்தாரா?

DIN


அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் அடுத்த போஸ்டர் இன்று வெளியானது. 

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கியுள்ளார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. 

இப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. 

தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, பிகில் படத்தின் டீஸர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், படக்குழுவினர் டிரெய்லர் அப்டேட் குறித்த தகவலையே நேற்று (திங்கள்கிழமை) வெளியிட்டனர். 

அந்த வகையில், பிகில் திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 12-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, பிகில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை குறிப்பிட்டு இன்று ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது. இதுவரை விஜயை மையமாக வைத்து போஸ்டர்கள் வெளியான நிலையில் தற்போது படத்தின் கதாநாயகி நயன்தாரா இருக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அட்லியின் முதல் படமான ராஜா ராணியில் திருமண காட்சியில் இருப்பதுபோலவே நயன்தாரா பிகில் படத்தின் இந்த போஸ்டரிலும் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT