bigil trailer review 
செய்திகள்

பிகில் எப்படிப்பட்ட படம்! ட்ரெய்லர் விமரிசனம் (விடியோ)

விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பிகில் ட்ரெய்லர் அக்டோபர் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆனது.

Uma Shakthi

விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பிகில் ட்ரெய்லர் அக்டோபர் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆனது. ‘எனக்கு புட் பால் எல்லாம் தெரியாது ஆனா எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்’, ‘விளையாட்டாலதான் உங்க வாழ்க்கையே மாறப் போகுது’ போன்ற 'தெறி’ வசனங்கள் படத்தில் நிறைய உண்டு. 'போட்றா வெடியை' என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருவதுடன், இப்படத்தின் ட்ரெய்லர் லட்சணக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்று வைரலாகி வருகிறது.

பிகிலில் விஜய்க்கு மூன்று வேடங்களா (ராயப்பன் - மைக்கேல் - பிகில்) அல்லது இரண்டு வேடமா என்பது படம் வெளியானவுடன் தான் தெரியும். இது ஆக்‌ஷன் சண்டைக்காட்சிகள் நிறைந்த படம் என்பது ட்ரெய்லரைப் பார்த்தவுடன் புரிந்து கொள்ள முடிகிறது. நயன்தாரா எண்ட்ரி வெகு அழகு. என்ன மைக்கேல் ஆக்‌ஷன்லேயே இறங்கியாச்சு, காதலுக்கு மரியாதை எல்லாம் மறந்தாச்சா என்று கேட்கிறார். இப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற ஆவலும் ப்ளாஷ்பேக் கதையின் மையம் அதுதான்.

வழக்கம் போல ஏ.ஆர்.ரஹ்மான் இசை பிகிலுக்கு வலு சேர்த்துள்ளது. ஷாரூக் கான் நடித்த சக்தே இந்தியா, அண்மையில் வெளியான கனா, விமன் ஸ்போர்ட்ஸை மையப்படுத்தி வெளியான ‘டியர் காம்ரேட்' உள்ளிட்ட படங்களை நினைவுபடுத்தினாலும் பிகிலில் புதிதாக என்னவிருக்கிறது என்பதைப் தீபாவளி வரை பொருத்து இருந்துதான் ரசிகர்கள் காண வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு எதிராக உருவாக்கப்படும் பகைமை! ஷேக் ஹசீனா

கண்டிப்பாக “ஒளி” பிறக்கும்! TVKன் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் Vijay பேச்சு

ஏழைகளுக்கும் கல்வி, சுகாதாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: மோகன் பாகவத்

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்த அறிவிப்பு

50 காசு நாணயம் செல்லுமா? ஆர்பிஐ சொல்வது என்ன

SCROLL FOR NEXT