செய்திகள்

வெகு காலம் கிடப்பில் இருந்த கெளதம் வாசுதேவன் மேனன் படம் புத்தாக்கம் பெறுகிறது

2013-ம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் யோஹன்: அத்தியாயம் ஒன்று என்ற படத்தில் விஜய் நடிக்கவிருந்தார்.

ராகேஷ்

2013-ம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் யோஹன்: அத்தியாயம் ஒன்று என்ற படத்தில் விஜய் நடிக்கவிருந்தார். இந்தப் படத்துக்கு பூஜை போடப்பட்டு, படத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப் போவதாகக் கூட அறிவித்தனர். ஆனால் ஷூட்டிங் தொடங்காமலேயே இந்தப்படம் கிடப்பில் போடப்பட்டது.

இந்த படம் சிஐஏ-வில் பணிபுரியும் ஒரு அமெரிக்க வாழ் இந்தியரைச் சுற்றி பின்னப்பட்டது. மூன்றாம் தலைமுறை என்.ஆர்.ஐ. அமெரிக்க செனட்டராக இருக்கும் அவரது தந்தை, அமெரிக்க மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆபத்தைக் கண்டுபிடிக்க மகனை இந்தியாவுக்கு அனுப்புகிறார். சுற்றி நடக்கும் க்ரைம் விஷயங்களை புலனாய்வு செய்யும் ஒரு ஸ்பை திரில்லராக இப்படத்தை உருவாக்க கெளதம் வாசுதேவ் மேனன் திட்டமிருந்தார். இந்தப் படத்துக்குப் பின் அடுத்தடுத்து இதன் தொடர்ச்சிகளை உருவாக்கும் திட்டங்களையும் கொண்டிருந்தார். ஒவ்வொன்றும் வெவ்வேறு நகரத்தில் வெவ்வேறு மர்மத்தைச் சுற்றி நடக்கும் கதைகளாக அமைத்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக இந்த படம் தனது மற்ற படங்களை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும், தனது  ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று விஜய் உணர்ந்தார். கடைசி நேரத்தில் படம் தனது இமேஜிக்கு பொருந்தாது என்று கூறி கைவிட்டார் விஜய்.

எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் துருவ நட்சத்திரம் படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், தனது கனவுப் படமான யோஹன்: அத்யாயம் ஒன்று படத்தை மீண்டும் இயக்கவிருக்கிறார் கெளதம் மேனன். இதில் வருண் ஹீரோவாக நடிக்கிறார். கோலிவுட்டில் துணை நடிகராக இருந்த வருண் அண்மையில் வெளியான பப்பி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். வேல்ஸ் நிறுவனத்துக்காக கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் இந்தப் படத்துக்கு யோஹன்: அத்தியாயம் ஒன்று என்ற பழைய படப் பெயரே சூட்டப்படுமா அல்லது புதிய பெயர் சூட்டப்படுமா என்று தெரியவில்லை. ஆனால் விஜய் இந்தப் படத்தை கைவிட்ட பின் கெளதம் இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் கதையை தூசி தட்டி எடுத்திருப்பதால் கிடப்பில் இருந்த படம் புத்துயிர் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT