செய்திகள்

என்னதான் நடக்குது பிக் பாஸ் பங்கேற்பாளர்களுக்கு?

கவின் யாரைக் காதலித்திருப்பார் என்று நெட்டிசன்களுக்கு குழப்பம் ஏற்படவே, துப்பறவாளர்களாக மாறி களத்தில் இறங்கிவிட்டனர்.

Snehalatha

தமிழகத்தில் என்னனவோ பிரச்னைகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்கோ காதல், காதல் நிமித்தம், மோதல், வெளியேறல் என்று வேற லெவல் பிரச்னைகள். 

கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் அண்மையில் நடந்த உரையாடலில் கவின் தற்போது பிரபலமாக இருக்கும் ஒருவர் தன் முன்னாள் காதலி ஆனால் அவர் பிரபலமான பிறகு தன்னைப் பிரிந்து விட்டதாக பகிர்ந்துள்ளார்.

கவின் யாரைக் காதலித்திருப்பார் என்று நெட்டிசன்களுக்கு குழப்பம் ஏற்படவே, துப்பறவாளர்களாக மாறி களத்தில் இறங்கிவிட்டனர். கவின் மற்றும் அவரது தோழமைகளின் ட்விட்டர், இன்ஸ்டா என வலைதளத்தில் வலை வீசித் தேடியிருக்கின்றனர். கவினின் பிரியத்துக்குரியவராக இருந்தவர் பிரியா பவானி சங்கர்தான் என்று அச்சமூக வலைத்தளப் போராளிகள் முடிவுக்கு வந்தனர். பழைய ட்வீட்களை மீள் பதிவிட்டு இணையத்தில் கவின் பிரியா புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.  

பிரியா பவானி சங்கர் சில வருடங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒரு தொடரில் நடித்த சமயம் கவினுடன் நட்பு ஏற்பட்டதாகவும் அது காதலாக கனிந்தது என்றும் கருதப்படுகிறது. இதற்கு ஆதாரமாக இவர்கள் இருவரும் ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படங்களும் ட்வீட் உரையாடல்களும் என்கிறார்கள் நெட்டிசன்கள். கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க, கவினுடைய அம்மா மற்றும் அவரது குடும்பத்தைச் சார்ந்த ராஜலட்சுமி, தமயந்தி, ராணி உள்ளிட்டோருக்கு திருச்சி நீதிமன்றம் நிதி மோசடி வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இவர்கள் முறைகேடாக சீட்டு நிறுவனம் நடத்தி வந்ததாகவும், பணம் வாங்கியவர்களிடம் திருப்தி தராத நிலையில் கிட்டத்தட்ட 30 லட்சத்துக்கும் மேலாக மோசடி செய்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டு ராஜலட்சுமி மற்றும் மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன் அம்மாவுக்கு நிதி மோசடி வழக்கில் சிறை தண்டனை கிடைத்த விஷயத்தை இன்னும் அறியாத கவின் தன் பழைய காதலைப் பற்றி லாஸ்லியாவிடம் பகிர்ந்திருப்பது நகை முரண்.

மேயாத மான் படம் மூலம் வெள்ளித் திரைக்கு அறிமுகமான பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் நல்ல பெயர் பெற்று தற்போது தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2-வில் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக இன்னும் பெயரிப்படாத படமொன்றில் நடிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT