செய்திகள்

சாதித்துக் காட்டிய ‘சாஹோ’ பிரபாஸ்: ஐந்து நாள்களில் ரூ. 350 கோடி வசூல்!

இப்படத்தைத் தயாரித்துள்ள யூவி கிரியேஷன்ஸ், சாஹோ படத்தின் ஒவ்வொரு நாளின் வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்து வருகிறது.

எழில்

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படம், ரூ. 250 கோடியில் உருவாகியுள்ள சாஹோ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். ஷ்ரதா கபூர், ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி போன்றோர் நடித்துள்ளார்கள்.

கடந்த வெள்ளியன்று வெளியான சாஹோ படத்துக்குக் கிடைத்துள்ள விமரிசனங்கள் அதற்குச் சாதகமாக இல்லை. பலரும் படத்துக்கு எதிர்மறையான விமரிசனங்களை அளித்துள்ள நிலையில் வசூலில் அசத்தியுள்ளது சாஹோ படம். 

இப்படத்தைத் தயாரித்துள்ள யூவி கிரியேஷன்ஸ், சாஹோ படத்தின் ஒவ்வொரு நாளின் வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்து வருகிறது. இதன்படி சாஹோ படம் நேற்று வரை, அதாவது முதல் ஐந்து நாள்களில் உலகளவில் ரூ. 350 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்தியிலும் வெளியான சாஹோ படம், இந்தியா முழுக்க முதல் நான்கு நாள்களில் (வரி நீங்கலாக) ரூ. 93 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. இதன் அடிப்படையில் சாஹோ படம் குறைந்தபட்சம் ரூ. 400 கோடி வசூலை உலகளவில் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய அதிபர் வருகை எதிரொலி: தில்லியில் உச்சகட்ட உஷார் நிலை!

எல்லா நாடும் ஒன்றுதான்! அமெரிக்காவில் திருடப்படும் செப்புக் கம்பிகள்!

கருப்பும் கறுப்பும்!

ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் சாதிக்க விரும்பும் திலக் வர்மா!

இலங்கையில் பாகிஸ்தானின் மீட்புப்பணிகளை முடக்க இந்தியா முயற்சி? -பாக். குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு

SCROLL FOR NEXT