செய்திகள்

ரஜினி மகளுக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட பிரச்னை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் அண்மையில் தொழிலதிபர் விசாகனை திருமணம் செய்து கொண்டார்.

Snehalatha

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் அண்மையில் தொழிலதிபர் விசாகனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியர் கடந்த வாரம் எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்தனர். ஹீத்ரூ விமான நிலையத்தில் காருக்காக காத்திருந்த சமயத்தில் பாஸ்போர்ட் வைத்திருந்த கைப்பை தொலைந்து போனது அவர்களுக்குத் தெரிய வந்தது. உடனே அங்கிருந்த காவலர்களிடம் பிரச்னையை எடுத்துச் சொல்ல, அவர்கள் பரிந்துரையின்படி,  இமெயில் மூலம் புகார் அளித்தார்.

மறுநாள் அக்காவலர்களிடமிருந்து பதில் மெயில் வந்தது. அதில் இவர்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகில் இருந்த சிசிடிவி கேமரா எதையும் பதிவு செய்யவில்லை. அது இயந்திர கோளாறாக இருக்கலாம் என்று பதில் அனுப்பியிருந்தனர். இது குறுத்து செளந்தர்யா கூறுகையில், ‘எனக்கு மிகவும் அதிர்ச்சியளித்த சம்பவம் இது. விமான நிலையத்தின் பொறுப்பற்ற தன்மையும் கூட. சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு இல்லை என்றால் யாரைத்தான் நம்புவது? விலைமதிப்புள்ள உடமைகள், என் கணவரின் பாஸ்போர்ட் ஆகியவை பறிபோய்விட்டது. இது மிகுந்த மனவலியைத் தரக் கூடிய சம்பவம். இதற்கு விமான நிலைய அதிகாரிகள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். இது எங்களுக்கு நடந்திருக்கக் கூடாது. எங்களுக்கு மட்டுமல்ல யாருக்கும் நடக்கக் கூடாது’ என்ற் தனது ட்விட்டரில் மனக்குறையை பதிவிட்டிருந்தார் செளந்தர்யா.

செப்டம்பர் 1-ம் தேதி காணாமல் போன பாஸ்போர்ட் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT