பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் ராஜசேகர் 
செய்திகள்

பிரபல இயக்குநர், நடிகர் ராஜசேகர் உடல்நலக்குறைவால் காலமானார் 

பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் ராஜசேகர் உடல்நலக்குறைவால் சென்னையில் ஞாயிறன்று காலமானார்

DIN

சென்னை: பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் ராஜசேகர் உடல்நலக்குறைவால் சென்னையில் ஞாயிறன்று காலமானார்

தமிழில் 'பாலைவனச்சோலை' உள்ளிட்ட படங்களை இரட்டை இயக்குநர்கள் ராபர்ட் - ராஜசேகர் இயக்கியுள்ளனர். அவர்களில் ராஜசேகர் முக்கியமானவர்.

பின்னர் அவர் தனித்து சின்னப்பூவே மெல்லப்பேசு, மனசுக்குள் மத்தாப்பு மற்றும் பறவைகள் பலவிதம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.      

பின்னர் நடிகராகவும் மாறிய அவர் பாரதிராஜா இயக்கிய 'நிழல்கள்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்துவின் முதல் பாடலான 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடலில் இவர் நடித்திருந்தார்.

சமீபமாக அவர் தொலைக்காட்சி நாடகங்களில்  நடித்து வந்தார். உடல்நலக்குறைவால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஞாயிறு காலமானார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி திரைப்படமல்ல... ராம் கோபால் வர்மா பதிவு வைரல்!

போக்சோ சட்டத்தில் பொய்ப் புகார் அளித்தால்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு!

ஆப்கன் எல்லையில் பாக். ராணுவம் நடவடிக்கை: 4 நாள்களில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT