செய்திகள்

எனக்கு மனநிறைவைத் தந்த படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'! சித்தார்த் நேர்காணல்

உமா ஷக்தி.

சிவப்பு மஞ்சள் பச்சை படத்துல போக்குவரத்து காவல்துறை அதிகாரியா நடிச்சிருக்கீங்க? இந்த அனுபவம் எப்படி இருந்தது?

இந்தப் படத்துல ரெண்டு விஷயம் எனக்கு முக்கியமாக பட்டுது. இது சசி சார் படம். நிஜ வாழ்க்கைக் கதையை சினிமா மொழியில் ரொம்ப அழகா காட்டக் கூடிய இயக்குநர் அவர். அவர் படத்துல ஓபி அடிக்க முடியாது, செயற்கையா நடிக்க முடியாது. ரெண்டாவது, நான் இதுவரை செய்யாத ஒரு காரெக்டர் இது. எந்த ஒரு கதாபாத்திரத்தையும் உணர்ந்து நடிக்க எனக்குப் பிடிக்கும். அதோட பின்னணி என்னன்னு தெரிஞ்சுப்பேன். இந்தப் படத்துல ட்ராபிக் போலீஸ், இந்த கேரக்டரோட தோற்றம் மிகவும் முக்கியம். அதுக்காக உடம்பை ஏத்தறது ஈஸி, ஒரு போலீஸ் மைண்ட்செட் அப்சர்வ் பண்ணி கொண்டு வரதுதான் என் வேலையா இருந்தது. முக்கியமா என்னோட முந்தைய படங்கள்ல இருக்கக் கூடிய அல்லது என் அசலான பாடி லாங்குவேஜ் தெரியக்கூடாது. சித்தார்த் இல்லாமல் ராஜசேகர்தான் படத்துல இருக்கணும்.

சிவப்பு பச்சை மஞ்சள் ஃபேமிலி ஆடியன்ஸுக்கான படம். ரசிகர்களைப் பொருத்தவரை ஒரு நடிகரா நீங்க பண்ற சின்ன சின்ன விஷயங்களைக் கூட நோட் பண்ணி பாராட்டுவாங்க. சசி சார் நல்ல ஃப்லிம் மேக்கர் - எனக்கும் அவருக்கும் நல்ல புரிதல் இருந்தது. என் டைரக்டரை திருப்திப் பண்ணனும், என்னை திருப்திப்படுத்திக்கணும். இதெல்லாம் அமைஞ்சு வந்த படம்தான் சிவப்பு மஞ்சள் பச்சை. படத்துக்கு நல்ல ரீச் கிடைச்சிருக்குங்கறப்ப நிறைவைத் தருது.

நல்ல படம் எடுக்கறது மட்டுமல்ல அதை கொண்டு போய் சேர்க்கறதும் முக்கியம். சசி சாரும் நானும் தூங்கி ஒரு வாரம் ஆகுது. படம் முழுவதும் ரெடியாகி ஒரு மாசம் ஆகியும், சரியான ரிலீஸ் தேதிக்காக காத்துட்டு இருந்தோம். செப்டம்பர் 6 வெளியிடலாம்னு முதல்ல முடிவாகி, அதுக்கப்பறம் அது மாறி, மறுபடியும் செப்டம்பர் 6 வெளியாக முடிவானது. இன்னொரு முக்கியமான விஷயம் படத்துக்கு நல்ல தியேட்டர்கள் கிடைச்சுது. எங்க படம்னு இல்லை, எல்லா படங்கள்லேயும் உழைப்பு ஒண்ணுதான். அதனால எல்லாருக்கும் எதிர்ப்பார்ப்பு இருக்கும். சிவப்பு மஞ்சள் பச்சை படத்துல content நல்லா இருக்கு - ரெண்டாவது தியேட்டர் கிடைச்சுது. இந்த ஜானர்ல ரொம்ப different படமிது. நிறைய பெண்கள் படம் பார்த்து ரசிக்கறாங்க. பேமிலி ஆடியன்ஸை ரீச் ஆகியிருக்கு. 

படம் வெள்ளிக்கிழமை ரிலீஸாகியிருக்கு. முதல் நாள் ரெஸ்பான்ஸை வைச்சு மட்டும் நான் ஒரு படத்தோட ரிசல்டை முடிவு மாட்டேன். ஒரு வாரம் ஆகட்டும். word of mouthனால படத்துக்கு இன்னும் ரசிகர்கள் நிறைய வருவாங்கன்னு நம்பறேன்.

வெற்றி தோல்வி எப்படி பாக்கறீங்க?

நான் பண்ற எந்தப் படமும் ஒண்ணு மாதிரி இன்னொன்னு இருக்கக் கூடாதுன்னு நினைப்பேன். past-ஐ நான் பெரிசா மதிக்கறது கிடையாது. பழைய வெற்றி தோல்விகள் என்னை பாதிக்காது. கடந்த சில வருடங்களில் நான் எடுத்த முடிவு என்னன்னா எல்லாரும் பாக்கற படங்கள்ல நடிக்கணும். பரீட்சார்த்த முயற்சிகள் ஓகேதான். ஆனால் ஜனரஞ்சக பாணி படங்கள் நடிக்கவும் தேவையா இருக்கு. எனக்கு அது திருப்தியை தருது. தெலுங்கில் ஏற்கனவே இந்த மாதிரி ரோல்கள் பண்ணியிருக்கேன். variety of roles பண்றது நல்லதுன்னு நினைக்கறேன். தொடர்ந்து வேலை செஞ்சிட்டிருக்கேன். சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 17 வருஷம் ஆகுது. திருப்தியாதான் இருக்கேன். சில சமயம் படங்கள் எதுவும் ரிலீஸாகாது. திடீர்னு மாசம் மாசம் ரிலீஸ் இருக்கும். எதுவும் நம்ம கைல கிடையாது. இதைப் புரிஞ்சுக்கிட்டேன். அதனால சந்தோஷமா திருப்தியா இருக்கேன்.

ஆங்கிலத்தில் - ஆஷாமீரா ஐயப்பன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT