செய்திகள்

என்ஜிகே படத்துக்குக் கிடைத்த முடிவு என்னைப் பாதிக்கவில்லை: சூர்யா

என்ஜிகே படத்தின் கதையை உருவாக்க இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொண்டார் செல்வராகவன்.

எழில்

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவான படம் - என்ஜிகே. இப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா.

சமீபத்தில் வெளியான இந்தப் படம் குறித்து நடிகர் சூர்யா, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

என்ஜிகே படத்தின் கதையை உருவாக்க இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொண்டார் செல்வராகவன். நான்கு வரைவுகளுடனும் 3 கிளைமாக்ஸ் காட்சிகளுடனும் வந்தார். படத்துக்காகத் தேர்ந்தெடுத்ததைச் சிறந்ததாக நாங்கள் எண்ணினோம். தயாரிப்பாளர், இயக்குநர், நான் என மூவரும் ஒரே அலைவரிசையில் இருந்தோம். மிகவும் நேர்மையாக என்ஜிகே படத்தில் பணியாற்றினோம். படத்துக்குக் கிடைத்த முடிவு என்னைப் பாதிக்கவில்லை. ஆனால் அதுபோன்ற ஒரு படம் நன்றாக ஓடியிருக்கலாம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதா் அங்காடி சிறப்பு விற்பனை: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

தீபாவளி கதா் சிறப்பு விற்பனை: கன்னியாகுமரிக்கு விற்பனைக் குறியீடு ரூ. 4 கோடி

வலுவான பொருளாதாரத்தை கட்டமைக்கலாம்!

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT