நடிகர் அருண் விஜய் 
செய்திகள்

ரஜினி பாராட்டிய அருண் விஜய்யின் 'மாஃபியா' திரைப்பட  டீசர் 

நடிகர் ரஜினிகாந்த் பாராட்டிய அருண் விஜய் நடித்துள்ள 'மாஃபியா' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

DIN

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பாராட்டிய அருண் விஜய் நடித்துள்ள 'மாஃபியா' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

'துருவங்கள் 16' திரைப்படத்தை இயக்கியவர் கார்த்திக் நரேன், அப்படத்தின் வெற்றிற்குப் பிறகு அவர் கவுதம் மேனன் தயாரிப்பில், அரவிந்த் சாமி நடிப்பில் 'நரகாசூரன்' என்னும் படத்தினை இயக்கினார். ஆனால் பொருளாதார சிக்கல்களின் காரணமாக அப்படம் வெளியாகவில்லை.

அதன்பின்னர் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அருண் விஜய் நடிப்பில் 'மாஃபியா' என்னும்   படத்தினை இயக்கி வருகிறார். அவருடன் வில்லனாக நடிகர் பிரசன்னா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜேக்ஸ் பெஜாய் இசையமைக்க, ஒளிப்பதிவை - கோகுல் பெனாயும், எடிட்டிங்கை ஸ்ரீஜித் சாரங்கும் கவனித்துக் கொள்கின்றனர் 

இப்படத்தின் டீசரை திங்கள் மாலை 6 மணிக்கு இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டார்.  முன்னதாக இயக்குநர் கார்த்திக் நரேன் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து தனது புதிய படமான மாஃபியாவின் டீஸரைக் காண்பித்தார். அப்போது ரஜினி தன்னிடம்,  'புத்திசாலித்தனமான படம் கண்ணா. செமயா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’ என்று கூறியதை கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் உற்சாகமாக பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT