செய்திகள்

‘சிங்கப்பெண்’ நயன்தாரா!

DIN

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்றாலே அது நம் நயன்தாராதான். அவ்விட தேசத்திலிருந்து தமிழுக்குத் தாவ நினைக்கும் நடிகைகளுக்கெல்லாம் நயன்தான் ஐயர்ன் டானிக். த்ரிஷா, சமந்தாவிலிருந்து செகண்ட் இன்னிங்ஸ் ஜோதிகா வரை பலரும் இன்று கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிப்பதற்கு முக்கியக் காரணமே, நயன்தாரா நடித்து ஹிட் ஆன ‘மாயா’ படம் கொடுத்த மயக்கம்தான்.

இன்று ரூ. 4-5 கோடி வரை சம்பளம் வாங்கும் நயன்தாராவின் வெற்றிக்குப் பின்னால் அவரது பிரமாதமான கதையறிவும் ஸ்கிரிப்ட் சென்ஸும் முக்கியக் காரணங்களாக உள்ளன. மலையாளக் கலப்பின்றித் தமிழ் பேசுபவருக்குத் தமிழைச் சரளமாக எழுதவும் தெரியும் என்பது இன்னொரு ஸ்பெஷல். சரி, அறிமுகம் போதும். விஷயத்திற்கு வருவோம்.

எங்குப் படித்திருக்கிறார் நயன்தாரா? என்ன படித்திருக்கிறார்? எப்படி சினிமாவிற்குள் வந்தார்?

நயன்தாராவின் பூர்வீகம், கேரளா. ஆனால் அவரது தந்தை ஏர்ஃபோர்ஸ் அதிகாரி என்பதால் அவர் பெங்களூருவிற்கு மாறுதலானபோதுதான் அங்கு நயன் பிறந்துள்ளார். தந்தையின் பணிச்சூழல்களால் நயனும் பல மாநிலங்களுக்குப் பறக்க நேர்ந்தது. பள்ளிப் படிப்பையே பல மாநிலங்களில் படித்திருக்கிறார். குஜராத்தின் ஜம்நகர் உள்பட வட இந்தியாவில்தான் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்துள்ளார். பிறகு கேரளாவுக்கு வந்துவிட்டார். திருவல்லாவில் உள்ள பலிக்காமடோம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்தான் ப்ளஸ் டூ படிப்பை முடித்தார். பள்ளி நாள்களில் நடிப்பு ஆசையில்லாமல் படிப்பில் ஆர்வமாகவும் நல்ல மாணவியாகவும் இருந்த நயனுக்கு நடிப்பு ஆசை எப்படி வந்ததாம்?

திருவல்லாவில் உள்ள மார்தோமா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு படிக்கும்போதுதான் சத்தியன் அந்திக்காடுவின் ‘மனசின்அக்கரே’வில் நடிக்கும் வாய்ப்பு 2003-ல் வந்துள்ளது. நயனின் குடும்பத்துக்கு சினிமா பின்னணி இல்லாததால் அதுவரை சினிமா படப்பிடிப்பை வேடிக்கை கூட பார்த்திராத பெண்ணாக அவர் இருந்திருக்கிறார்.

இதுபற்றி ஒருமுறை நயனே மனம் திறந்திருக்கிறார்.  ‘சினிமாவில் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பியதில்லை. இன்னும் சொல்லப்போனால், நடிகையாவேன் என்று நான் நினைத்ததில்லை. ‘மனசின்அக்கரே’ வாய்ப்ப்பு வந்தபோது, சரி முயற்சி பண்ணிப் பார்ப்போம் என்றுதான் நடிக்கச் சம்மதித்தேன். படப்பிடிப்பு தொடங்குவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு படப்பிடிப்புப் பகுதிக்குச் சென்றுவிட்டேன். முதல் நாளன்று மதியம் வரை சும்மா இருந்தேன். மதிய நேரத்தில் என்னுடைய ஷாட்டைப் படமாக்கினார்கள். அப்போது இயக்குநர் என்ன சொன்னாரோ அதே முகபாவங்களுடன் நடித்தேன். அது சரியா தப்பா என்று கூட எனக்குத் தெரியாது. ஆனால் நடித்துவிட்டேன். என்னுடைய நடிப்பு ஓகே ஆனது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. பிறகு மலையாளத்தில் இரு படங்களில் நடித்தேன். பிறகு மலையாளத்தில் ஐயா பட வாய்ப்பு கிடைத்தது என்கிறார் இந்தச் சிங்கப்பெண். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

SCROLL FOR NEXT