முகப்பு
செய்திகள்

ஷாருக்கான் பட தயாரிப்பாளர் குடும்பத்தில் மூவருக்கு கரோனா வைரஸ் தொற்று

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் மற்றும் அவருடைய இரு மகள்கள் என ஒரே குடும்பத்தில் மூன்று பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Updated On : 9 ஏப்ரல், 2020 at 10:45 AM
ஸோயா - ஷாஷா
பகிர்:

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் மற்றும் அவருடைய இரு மகள்கள் என ஒரே குடும்பத்தில் மூன்று பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 88,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 5,700 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை எக்ஸ்பிரஸ், ரான் ஒன் போன்ற பிரபலமான ஹிந்திப் படங்களைத் தயாரித்தவர் கரிம் மொரானி. இவருடைய மகள் ஷாஷாவுக்கு கரோனா வைரஸ் தொற்று கடந்த வாரம் உறுதியானது. மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் ஷாஷாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதற்கு முன்பு இலங்கையிலிருந்து ஷாஷா திரும்பினார். இதனால் ஜுஹுவில் உள்ள வீட்டில் கரிம் மொரானி குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

Advertisement

இந்நிலையில் தற்போது அந்தக் குடும்பத்தில் மூவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. ஷாஷாவுக்கு அடுத்ததாக கரிம் மொரானி மற்றும் அவருடைய இன்னொரு மகளும் நடிகையுமான ஸோயா மொரானி என மேலும் இருவருக்கும் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸோயா கடந்த மாதம் ராஜஸ்தான் சென்று வந்தார். கரின் மொரானி, ஸோயா, ஷாஷா ஆகிய மூவருக்கும் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.