செய்திகள்

ஆமிர் கான் பட வெளியீடு: ஒரு வருடத்துக்கு ஒத்திவைப்பு!

DIN

ஆமீர் கான் நடித்து வரும் லால் சிங் சத்தா படத்தின் வெளியீடு ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்துக்குப் பிறகு ஆமிர் கான் நடிக்கும் படம் - லால் சிங் சத்தா. ஆறு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற புகழ்பெற்ற ஹாலிவுட் படமான ஃபாரஸ் கம்ப்-ன் ரீமேக் அது. 

லால் சிங் சத்தா படத்தில் ஆமிர் கானின் ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். இருவரும் இதற்கு முன்பு த்ரீ இடியட்ஸ், தலாஸ் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்கள். ஃபாரஸ்ட் கம்ப் படத்தில் இடம்பெற்ற பெஞ்சமின் புஃபோர்ட் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இப்படத்தை இயக்கி வருகிறார். இசை - ப்ரீதம், தயாரிப்பு - ஆமிர் கான், கிரண் ராவ், வியாகாம் 18 ஸ்டூடியோஸ்.  

லால் சிங் சத்தா, 2020 கிறிஸ்துமஸ் சமயத்தில் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இப்படத்தின் வெளியீடு ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. லால் சிங் சத்தா, 2021 கிறிஸ்துமஸ் சமயத்தில் வெளியாகும் என தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT