செய்திகள்

சுசாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியா மீது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு வழக்கு

DIN

சுசாந்த் சிங் மரண வழக்கில் நடிகை ரியா மீது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.

நடிகா் சுசாந்த் சிங், மும்பை பந்த்ரா புகா் பகுதியில் அமைந்துள்ள அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தாா். இந்த வழக்கை துணைக் காவல் ஆணையா் தலைமையிலான மும்பை காவல்துறை குழு விசாரணை நடத்தி வந்தது.

சுசாந்த் சிங் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடை தந்தை சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சுசாந்த் சிங் மரணம் தொடர்பாக அவருடைய காதலியும் நடிகையுமான ரியா மற்றும் அவரின் குடும்பத்தினா் மீது புகாா் தெரிவித்த சுசாந்த் சிங்கின் தந்தை இந்திரஜித், சுசாந்த் சிங்கின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 15 கோடி பணத்தை ரியா குடும்பத்தினா் தவறாக கையாண்டதாகவும் புகாா் தெரிவித்திருந்தாா். இந்தப் புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. 

சுசாந்தின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ சிறப்புக் குழு, விசாரணையைத் தொடங்கியுள்ளது. மும்பை காவல்துறையிடமிருந்த பெறப்பட்ட அறிக்கை மற்றும் வழக்கு தொடா்பான ஆவணங்களின் அடிப்படையில் அந்தக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சுசாந்த் சிங் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகை ரியாவின் வாட்சப் உரையாடல்களில் எம்.டி.எம்.ஏ., மரிஜூவானா போன்ற வார்த்தைகள் அதிகம் இடம்பெற்றுள்ளது. இதனால் அவர் போதைப் பொருள்களைப் பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ரியாவின் வாட்சப் உரையாடல்கள் குறித்து விசாரணை செய்யும்படி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் விசாரணை நடத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறை, நடிகை ரியா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ரியாவிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் பாலிவுட் திரையுலகினருக்குத் தொடர்பு உண்டா என விசாரணை நடத்தவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறை முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT