முகப்பு
செய்திகள்

அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுப்பது என் கடமை: ரஜினி

அண்ணாத்த படப்பிடிப்பில் எனக்கு இன்னும் 40% பணிகள் உள்ளன. அதை முடிப்பது என் கடமை...

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

தா்பாா் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இது ரஜினியின் 168-வது படம்.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறாா்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்து வருகிறாா். பொங்கலுக்குப் படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக இன்று அறிவித்துள்ளார் ரஜினி. இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

அண்ணாத்த படப்பிடிப்பில் எனக்கு இன்னும் 40% பணிகள் உள்ளன. அதை முடிப்பது என் கடமை. அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கலாநிதி மாறன் சொன்னார். இருந்தாலும் எனக்கென்று கடமை உள்ளது. அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை நான் முடிக்க வேண்டும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →