முகப்பு
செய்திகள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் 65 படத்தை இயக்கும் நெல்சன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

ரஜினி நடிப்பில் சிவா இயக்கும் அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. 

நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அடுத்ததாக, சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்தை இயக்கி வருகிறார். 

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். இந்தப் படம் ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

விஜய்யின் 65-வது படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பது நீண்ட நாளாகவே பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த வாய்ப்பு நெல்சனுக்குக் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் - சன் பிக்சர்ஸ் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் விஜய்யின் 65 படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →